/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தண்ணீர் சப்ளை பிரச்னை: பொதுமக்கள் மறியல்
/
தண்ணீர் சப்ளை பிரச்னை: பொதுமக்கள் மறியல்
ADDED : நவ 16, 2025 12:17 AM
அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு, சிறுபூலுவபட்டி கீதா நகரில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு ஆழ்குழாய் கிணறு மூலம் உப்பு தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
சில நாட்கள் முன் ஆழ்துளை கினற்றின் மோட்டார் பழுதானது. இதனால், உப்புத்தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. மோட்டாரை சீர் செய்து தண்ணீர் வினியோகத்தை சீரமைக்ககோரி அப்பகுதி பொது மக்கள் மாநகராட்சியில் புகார் அளித்தனர்.
புகாரை தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் பழுதான மோட்டாரை அப்புறப்படுத்தி விட்டு புதிய போட்டார் பொருத்தினர்.
ஆனால், நான்கு நாட்களில் மோட்டார் மீண்டும் பழுதானது. இதனால் மீண்டும் உப்பு தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. தரமான மோட்டாரை பொருத்தி தண்ணீர் வினியோகத்தை சீரமைக்க வேண்டும் என மீண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
ஆவேசம் அடைந்த பொதுமக்கள் வார்டு கவுன்சிலர் தங்கராஜ், தலைமையில், பெண்கள் காலி குடத்துடன் சிறுபூலுவபட்டி பஸ் ஸ்டாப் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாநகராட்சி உதவி பொறியாளர் மோகன்ராஜ், பொது மக்களிடம் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்துவதாக உறுதி கூறினார். அதனை தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து, மோட்டாரை சரி செய்து, தண்ணீரை வினியோகித்தனர்.

