/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொதுமக்கள் போராட்டம் :தற்காலிகமாக ஒத்திவைப்பு
/
பொதுமக்கள் போராட்டம் :தற்காலிகமாக ஒத்திவைப்பு
ADDED : நவ 02, 2025 10:04 PM
உடுமலை: குப்பம்பாளையம் கோழிப்பண்ணை பிரச்னைக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததால் காத்திருப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குடிமங்கலம் ஒன்றியம், குப்பம்பாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் கோழிப்பண்ணையால், சுற்றுப்பகுதிகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.
அதிகாரிகள் தரப்பில் விரைவில் முத்தரப்பு கூட்டம் நடத்தி பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

