/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்
/
சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : நவ 02, 2025 10:04 PM
உடுமலை: மடத்துக்குளம், கணியூர், ஸ்ரீ வெங்கட கிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடந்தது. அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, எம்.பி., ஈஸ்வரசாமி, மாவட்ட செயலாளர் பத்மநாபன், அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாமில், பொதுமருத்துவம், பொது அறுவைசிகிச்சை, எழும்பு முறிவு, மகப்பேறு மருத்துவம், குழந்தை நலம், இருதயத்துறை, நரம்பியல்துறை தோல்சிகிச்சை, பல், காது, மூக்கு, தொண்டை மனநலம், இயன்முறை மருத்துவம், ரேடியாலஜி, நுரையீரல் நோய் சிகிச்சை, நீரிழிவு நோய் சிகிச்சை, சித்தா மற்றும் ஆயுர்வேதம் ஆகிய உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
மேலும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகம், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து நல பெட்டகம், தாட்கோ சார்பில் தூய்மைப்பணியாளர்களுக்கு நல வாரிய அட்டை, தொழிலாளர் நலத்துறையின் சார்பில் அடையாள அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அடையாள அட்டை மற்றும் முழு உடல் பரிசோதனை அறிக்கை வழங்கப்பட்டது.

