/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
/
காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
ADDED : ஏப் 24, 2025 06:39 AM

அனுப்பர்பாளையம்; திருப்பூர், காலேஜ் ரோட்டில், மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது.
இதற்காக, குடிநீர் குழாய் அகற்றப்பட்டது. இதனால் குடிநீர் வினியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி 25வது வார்டு ஜீவா நகர், வள்ளுவர் நகர், அணைப்பாளையம், ஏ.சி.டி., கார்டன், வஞ்சிபாளையம் மெயின் ரோடு, அணைப்பாளையம் மெயின் ரோடு, அருள்ஜோதி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.
சீரமைக்க கோரி அப் பகுதி பொது மக்கள் மாநக ராட்சி முதலாம் மண்டல அலுவலகத்தில்முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
ஆவேசம் அடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் வார்டு கவுன்சிலர் தங்கராஜ், தலைமையில் நேற்று காலை சிறுபூலுவபட்டி ரங்கநாதபுரம் நால் ரோடு சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி உதவி பொறியாளர்கள் கணேஷ், மோகன்ராஜ் ஆகியோர் 'குடிநீர் வினியோகம் சீரமைக்கப்படும்' என உறுதி கூறியதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.  பாதிக்கப்பட்ட பகுதிக்கு உடனடியாக லாரி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டது.
கவுன்சிலர் தங்கராஜ் கூறுகையில், ''மக்கள் பிரச்னையில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுகின்றனர்,'' என்றார்.

