/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் தொட்டி அருகே மலம் வீச்சு; திருப்பூரில் பொதுமக்கள் அதிர்ச்சி
/
குடிநீர் தொட்டி அருகே மலம் வீச்சு; திருப்பூரில் பொதுமக்கள் அதிர்ச்சி
குடிநீர் தொட்டி அருகே மலம் வீச்சு; திருப்பூரில் பொதுமக்கள் அதிர்ச்சி
குடிநீர் தொட்டி அருகே மலம் வீச்சு; திருப்பூரில் பொதுமக்கள் அதிர்ச்சி
ADDED : ஜூலை 22, 2025 11:27 PM

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி, 46வது வார்டுக்கு உட்பட்டது காசிபாளையம். இப்பகுதியிலுள்ள ஏ.டி., காலனியில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.
20 குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். இந்த மையம் அமைந்துள்ள இடத்தில் மேல்நிலைத் தொட்டியும் உள்ளது. இவற்றுக்குச் சுற்றுச் சுவர் இல்லாத நிலை உள்ளது. இதனால், இப்பகுதியில் இரவு நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் சமூக விரோத நபர்களின் நடமாட்டம் காணப்படுகிறது.
இரவு நேரத்தில் ஒன்றாக கூடும் நபர்கள், மது அருந்துவது, கஞ்சா புகைப்பது போன்ற செயல்களில் ஈடுபடட்டு, மது பாட்டில்கள், தின்பண்ட மீதங்கள், உணவு பார்சல் கழிவுகள் அங்கேயே வீசி செல்வது தொடர்கதையாக உள்ளது. தற்போது, மலத்தை காகிதத்தில் சுற்றிக் கொண்டு வந்து அங்கன்வாடி மையத்தின் முன் மற்றும் மேல்நிலைத் தொட்டியின் அருகில் வீசிச் செல்கின்றனர்.
இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், 'குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடி மையத்தில் இப்படி செய்வதால், குழந்தைகள் சுகதாரமும், பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது. மேல்நிலைத் தொட்டியின் கீழே மலத்தை வீசிய நபர்கள் அதனை குடிநீர் தொட்டிக்குள் கூட வீச வாய்ப்புள்ளது.
எனவே, வளாகத்துக்கு சுற்றுச் சுவர் கட்டி பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்', என்றனர்.