/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொது கழிப்பிடம் திறக்காமல் இழுத்தடிப்பு; போராட முடிவு
/
பொது கழிப்பிடம் திறக்காமல் இழுத்தடிப்பு; போராட முடிவு
பொது கழிப்பிடம் திறக்காமல் இழுத்தடிப்பு; போராட முடிவு
பொது கழிப்பிடம் திறக்காமல் இழுத்தடிப்பு; போராட முடிவு
ADDED : அக் 24, 2025 12:10 AM

பெருமாநல்லுார்: பெருமாநல்லுார் ஊராட்சிக்குட்பட்ட பொடாரம்பாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் நாடாளுமன்ற உள்ளுர் வளர்ச்சி திட்ட நிதி 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டு நான்கு மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படவில்லை.கழிப்பிடத்தை சுற்றி முட்புதர்கள் மண்டியுள்ளது.
கடந்த ஆக., 15ல் கிராம சபா கூட்டத்தில் கழிப்பிடத்தை திறக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது, ஊராட்சி நிர்வாகத்தினர், தண்ணீர் குழாய்கள் அமைத்த பின் திறக்கப்படும் என்றனர். ஆனால் இன்று வரை குழாய்கள் அமைக்கப்படவில்லை.
வரும், 29க்குள் பொது கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி, ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக திருப்பூர் வடக்கு ஒன்றிய பா.ஜ. முன்னாள் பொது செயலாளர் குமார் தெரிவித்துள்ளார்.

