/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேலை கிடைக்காதோர் உதவித்தொகை பெறலாம்
/
வேலை கிடைக்காதோர் உதவித்தொகை பெறலாம்
ADDED : அக் 24, 2025 12:10 AM
திருப்பூர்: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து, எந்த வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு, தமிழக அரசு மாதாந்திர உதவித்தொகை வழங்கிவருகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 600 ரூபாய்; பொதுப்பிரிவினர் தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200; தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாய். பிளஸ் 2 மற்றும் அதற்கு சமமான கல்வித்தகுதியுள்ள பொதுப்பிரிவினருக்கு 400; மாற்றுத்திறனாளிகளுக்கு 750; பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு 600 ரூபாய்; மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
உதவித்தொகை பெற, www.tnvelaivaaippu.gov.in என்கிற இணையதளம் அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
தனியார் அல்லது அரசிடமிருந்து வேறு எந்த வகையிலும் உதவித்தொகையோ, சம்பளமோ பெறுவோர், விண்ணப்பிக்கக்கூடாது. ஒருமுறை பணி நியமனம் பெற்று, பி.எப்., பிடித்தம் செய்யப்பட்டிருந்தாலும், வேலைவாய்ப்பற்றோர் என்ற தகுதியை இழந்தவராகவே கருதப்படுவார். உதவித்தொகை பெற தகுதியானோர், உரிய ஆவணங்களுடன் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறவேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

