/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊராட்சிகளில் முழு சுகாதாரப்பணிகள் பொதுமக்கள் வலியுறுத்தல்
/
ஊராட்சிகளில் முழு சுகாதாரப்பணிகள் பொதுமக்கள் வலியுறுத்தல்
ஊராட்சிகளில் முழு சுகாதாரப்பணிகள் பொதுமக்கள் வலியுறுத்தல்
ஊராட்சிகளில் முழு சுகாதாரப்பணிகள் பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : ஆக 22, 2025 11:40 PM
உடுமலை: உடுமலை ஒன்றியத்தில் சுகாதாரத்தில் பின்தங்கியுள்ள ஊராட்சிகளை பட்டியலிட்டு, நோய் தடுப்பு நடவடிக்கையாக முழு சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளின் சுகாதாரத்தை மேம்படுத்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில், வீடுகளிலுள்ள குப்பைக்கழிவுகளை சேகரிக்கவும், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து உரம் தயாரிக்க வேண்டும்.
ஆனால், இப்பணிகள், 90 சதவீத ஊராட்சிகளில் முழுமையாக நடப்பதில்லை. குப்பையை சேகரித்து, திறந்த வெளிகளில் எரிப்பதும், குடியிருப்புகளுக்கு அருகேயே குவிக்கின்றனர்.
இதனால், மக்களும் திறந்த வெளிகளில் குப்பைக்கழிவுகளை கொட்ட துவங்கி விட்டனர். உடுமலை, கணக்கம்பாளையம், குறிச்சிக்கோட்டை, உட்பட சில கிராமங்களில், சுகாதாரம் சீர்குலைந்த நிலையில் உள்ளது.
தேங்கும் குப்பைக்கழிவுகளால், கொசுத்தொல்லையும் அதிகரித்து மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மறுபக்கம், திறந்த வெளிக்கழிப்பிட நிலையும், கிராமங்களை சுகாதாரமற்ற சூழலாக மாற்றிவருகிறது.
திறந்த வெளிக்கழிப்பிட நிலையை முற்றிலுமாக நீக்குவதற்கு, தனிநபர் இல்லக்கழிபிட திட்டம், சுகாதார வளாகம் என திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
இருப்பினும், திறந்த வெளிக்கழிப்பிட நிலைக்கு தீர்வில்லாமல் இருப்பது, நோய்த்தொற்றை அதிகரிக்கும் சூழலாக மாறிவிடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராமங்களில் முழுமையான சுகாதாரத்தை மேம்படுத்த, சுழற்சி முறையில் முழு சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.