ADDED : அக் 11, 2024 12:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, உழவர் சந்தைக்கு பூசணிக்காய் வரத்து அதிகமாகியுள்ளது. வழக்கமாக, இரண்டு முதல், மூன்று டன் பூசணி வரும் நிலையில், தெற்கு உழவர் சந்தைக்கு நேற்று, 4.250 டன் பூசணி விற்பனைக்கு வந்தது. ஒரு கிலோ, பத்து முதல், 15 ரூபாய்.
சின்ன ரகம், 15 முதல், 25, பெரியது, 35 ரூபாய் வரை விற்றது. இன்று சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை. வீடு, தொழில் நிறுவனங்கள், கடைகளில் பூஜை முடிந்த பின் பூசணிக்காயை உடைத்து திருஷ்டி கழிப்பது வழக்கம். இதற்காக பலரும் வாங்கிச் செல்வர் என எதிர்பார்த்து விவசாயிகள் அதிகளவில் பூசணிக்காய் தருவித்துள்ளனர். வரத்து அதிகம் என்ற போதும், நேற்று விற்பனை மந்தம் என்பதால், பூசணி விலை உயரவில்லை.