/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் பசுஞ்சோலையாகும் புங்கன்துறை
/
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் பசுஞ்சோலையாகும் புங்கன்துறை
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் பசுஞ்சோலையாகும் புங்கன்துறை
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் பசுஞ்சோலையாகும் புங்கன்துறை
ADDED : நவ 21, 2024 06:59 AM

திருப்பூர்; தாராபுரம், புங்கன்துறை கிராமத்தில், சந்தனம், செம்மரம், தேக்கு என, 5,060 மரக்கன்றுகள், 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில் நட்டு வைக்கப்பட்டுள்ளது.
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மாவட்டம் முழுவதும் காலியிடங்களில் மரம் வளர்க்கும் முயற்சி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. மானாவாரி நிலங்களில், சொட்டுநீர் பாசன வசதியை ஏற்படுத்தி, மரக்கன்று நட்டு வளர்க்க வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
நடப்பு ஆண்டில், மூன்று லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது; நேற்றைய நிலவரப்படி, இரண்டு லட்சத்து, 62 ஆயிரத்து, 400க்கும் அதிகமான மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளது.
'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், தாராபுரம் தாலுகா, புங்கன்துறை கிராமம், மண்திட்டுப்பாளையத்தில், சண்முகசுந்தரம் என்பவருக்கு சொந்தமான சந்தையன்காட்டில், நேற்று மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. சந்தனம் -1,500, செம்மரம் -1,410, தேக்கு -2,150 என, ஒரே இடத்தில், 5,060 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளது.
'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, திட்டக்குழுவினர் அழைப்புவிடுத்துள்ளனர்.