/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுத்திகரிப்பு மைய மோட்டார் 'மக்கர்'; ஜம்மனையில் பாய்ந்த சாயக்கழிவுநீர்
/
சுத்திகரிப்பு மைய மோட்டார் 'மக்கர்'; ஜம்மனையில் பாய்ந்த சாயக்கழிவுநீர்
சுத்திகரிப்பு மைய மோட்டார் 'மக்கர்'; ஜம்மனையில் பாய்ந்த சாயக்கழிவுநீர்
சுத்திகரிப்பு மைய மோட்டார் 'மக்கர்'; ஜம்மனையில் பாய்ந்த சாயக்கழிவுநீர்
ADDED : ஏப் 05, 2025 05:47 AM

திருப்பூர்; ஜம்மனை ஓடையில் சாயக்கழிவுநீர் ஓடியதற்கு, கள்ளிக்காடு பொது சுத்திகரிப்பு மைய மோட்டார் பழுதே காரணம் எனதெரியவந்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட கட்டமைப்புகளை உருவாக்க, சுத்திகரிப்பு மையத்துக்கு மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நேற்றுமுன்தினம், திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தை அருகே, ஜம்மனை ஓடையில் சிவப்பு நிறத்தில் சுத்திகரிக்காத சாயக்கழிவுநீர் கலந்து, பாய்ந்தோடியது.
ஓடை முழுவதும் சிவப்பு நிறமாக மாறியதால், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஜம்மனையில் ஓடிய சாயம், மாநகராட்சி அலுவலகம் பின்புறம், நொய்யலாற்றில் சென்று சேர்ந்தது.
மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடத்திய ஆய்வில், கே.வி.ஆர்., நகரில் உள்ள கள்ளிக்காடு பொது சுத்திகரிப்பு மையத்தின் மேன்ஹோலில் இருந்து சாயக்கழிவுநீர் வெளியேறியது தெரியவந்தது.
மாசுகட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் (வடக்கு) செந்தில்குமார் கூறியதாவது:
கள்ளிக்காடு பொது சுத்திகரிப்பு மையத்தில், உறுப்பினர் ஆலையிலிருந்து சாயக்கழிவுநீர் வந்துசேரும் தொட்டியில் உள்ள மோட்டாரில் திடீர் பழுது ஏற்பட்டுள்ளது. சுத்திகரிப்புக்கு சாயக்கழிவுநீர் செல்லாமல், சேமிப்பு தொட்டியில் கழிவுநீர் அளவு உயர்ந்துள்ளது.
இதனால், ஆலைகளில் இருந்து பம்பிங் செய்யப்பட்ட சாயக்கழிவுநீர், மேன்ஹோல் வழியாக வெளியேறியுள்ளது. 5 நிமிடத்துக்குள், சாயக்கழிவுநீர் பம்பிங் நிறுத்தப்பட்டது. சுத்திகரிப்பு மையத்தினர் உடனடியாக மோட்டார் பழுதை சரி செய்துவிட்டனர்.
மேன்ஹோல்களை அகற்றிவிட்டு, உயர்தர பைப்லைன் பதித்து நேரடியாக இணைக்க வேண்டும்; சுத்திகரிப்பு மைய மோட்டார் நிறுத்தப்பட்டால், சாய ஆலைகளில் உள்ள பம்பிங் மோட்டார் தானியங்கி முறையில் நிறுத்தப்படும் வகையில், 'ஸ்கேடா' (சூப்பர்வைசரி கன்ட்ரோல் அண்டு டேட்டா ஆக்வஷிசன்) தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாசுகட்டுப்பாடு வாரிய தலைமைக்கு கடிதம் அனுப்பப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.