/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென்னம்பாளையம் மார்க்கெட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம்
/
தென்னம்பாளையம் மார்க்கெட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம்
தென்னம்பாளையம் மார்க்கெட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம்
தென்னம்பாளையம் மார்க்கெட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம்
ADDED : ஆக 15, 2025 11:40 PM

திருப்பூர்,; திருப்பூர் தெற்கு ரோட்டரி மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி வழங்கும் இடம், குடிநீர் மற்றும் மின்சாரத்தை பயன்படுத்தி, ஐந்து ஆண்டுகளுக்கு பராமரித்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கும் சேவை துவங்கியுள்ளது.
கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், மத்திய பஸ் ஸ்டாண்ட், சந்தைப்பேட்டை, கோவில்வழி பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட், ஜெய்வாபாய் பள்ளி, நஞ்சப்பா பள்ளி, வேலம்பாளையம் பள்ளி உட்பட, 12 இடங்களில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் துவங்கப்பட உள்ளது.
இந்நிலையில், தென்னம்பாளையம் மார்க்கெட் பகுதியில், முதன்முதலாக ஆர்.ஓ., குடிநீர் மையம் நேற்று திறக்கப்பட்டது. மாவட்ட முன்னாள் கவர்னர் இளங்கோவன், வருங்கால கவர்னர் பூபதி ஆகியோர் திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைத்தனர். திட்ட தலைவர் மோகனசுந்தரம், திருப்பூர் தெற்கு ரோட்டரி தலைவர் தமிழரசு, பொருளாளர் செந்தில்குமார் பங்கேற்றனர்.
கலெக்டர் அலுவலகம், பஸ் ஸ்டாண்டுகள், அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகள் என, மேலும் 11 இடங்களில், குடிநீர் சுத்திகரிப்பு மையம் திறக்கப்படும். தலா, ஐந்து லட்சம் ரூபாய் வீதம், 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இப்பணிகளை செய்து வருவதாக, தெற்கு ரோட்டரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.