/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடல் நலத்துக்கு வேட்டு! குடிநீர் தரம்; ஆய்வு நடத்த எதிர்பார்ப்பு வீடு தோறும் கள ஆய்வு நடத்த எதிர்பார்ப்பு

ADDED : மார் 15, 2024 01:06 AM
திருப்பூர்;'தண்ணீரின் சுவை மாறுபட்டிருப்பதால், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது' என மக்கள் கூறி வரும் நிலையில், வீடு தோறும் கள ஆய்வு நடத்த வேண்டும் என்ற யோசனை முன் வைக்கப்பட்டிருக்கிறது.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுநீரை மையமாக வைத்து அன்னுார், அவிநாசி, திருமுருகன் பூண்டி, திருப்பூர் மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
'இந்த நீரின் சுவை, தற்போது மாறியுள்ளது; நன்னீருடன், உப்பு நீர் கலந்தது போன்றிருக்கிறது' என, மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். 'காலம் காலமாக வழங்கப்பட்டு வந்த தண்ணீரின் சுவை மாறியது ஏற்புடையதல்ல; பழைய சுவையில் நீர் வினியோகிக்கப்பட வேண்டும்' என, மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
'பவானி ஆறு தற்போது தரைதட்டும் நிலையில் இருப்பதால், நீர் வரத்து குறைந்திருக்கிறது; அதனால், சுவை மாறுபட்டிருக்கிறது. கோடை மழை பெய்து பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும் போது, இப்பிரச்னை தீரும்' என, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சமாதானம் கூறியும், மக்கள் ஏற்கவில்லை.
இந்நீரை பருகுவதால், தொண்டை வலி, சளி, காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்படுகிறது என, மக்கள் கூறுகின்றனர். எனவே, அந்தந்த பகுதி உள்ளாட்சி நிர்வாகத்தினர், சிறப்பு முகாம் நடத்தி கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.