/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் தர நிர்ணயக்குழுவினர் ஆய்வு
/
எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் தர நிர்ணயக்குழுவினர் ஆய்வு
எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் தர நிர்ணயக்குழுவினர் ஆய்வு
எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் தர நிர்ணயக்குழுவினர் ஆய்வு
ADDED : ஜன 28, 2025 06:14 AM

திருப்பூர் கோவை, பாரதியார் பல்கலையின் கீழ், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி செயல்படுகிறது. பல்லடம் ரோடு, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள இக்கல்லுாரி, பல்கலை கழகத்தின் 'பி' பிளஸ் அந்தஸ்தில் உள்ளது. மாணவியர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாவதுடன், கூடுதல் உள் கட்டமைப்பு வசதிகளும் தேவைப்படுவதால், 'ஏ கிரேடு' அங்கீகாரம் பெற இக்கல்லுாரி விண்ணப்பித்தது.
இதற்காக, பல்கலை நிதிநிலைக்குழு (யு.சி.ஜி.,) தேசிய தர நிர்ணயக்குழுவினர் நேற்று கல்லுாரிக்கு வந்தனர். கர்நாடகா, இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலை பேராசிரியர் ராதா, பஞ்சாப் பல்கலை (பட்டியாலா) முதல்வர் டிரிஷன் ஜித்கவுர், கேரள மாநிலம், சுல்தான்பத்தேரி, செயின்ட் மேரீஸ் கல்லுாரி முதல்வர் வர்கீஸ் வைத்யன் ஆகியோர் அடங்கிய தேசிய தர நிர்ணயக்குழுவினரை, கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) தமிழ்மலர் மற்றும் பேராசிரியர்கள் வரவேற்றனர்.
மாணவியரின் அணிவகுப்பு மரியாதையைஏற்றுக்கொண்ட குழுவினர், முனைவர், பேராசிரியர்களுடன் கலந்து ஆலோசனை கூட்டம் நடத்தினர். தொடர்ந்து, கல்லுாரி ஆய்வகம், நுாலகம், மைதானத்தின் நிலை உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.
வகுப்பறைகளுக்கு சென்று மாணவியரிடம் உங்களுக்கு இக்கல்லுாரி பயனுள்ளதாக இருக்கிறதா, பாடம் எப்படி கற்பிக்கப்படுகிறது, பேராசிரியர்களின் பணி எப்படி என்பது குறித்து கேட்டறிந்தனர். கல்லுாரியின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேணி, கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) தமிழ்மலர் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்தனர்.