/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் 27, 28ல் தர நிர்ணயக்குழு ஆய்வு
/
எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் 27, 28ல் தர நிர்ணயக்குழு ஆய்வு
எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் 27, 28ல் தர நிர்ணயக்குழு ஆய்வு
எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் 27, 28ல் தர நிர்ணயக்குழு ஆய்வு
ADDED : ஜன 26, 2025 03:28 AM
திருப்பூர்: மாநிலத்தில் அதிகளவு மாணவியர் படிக்கும் அரசு கலைக் கல்லுாரியாக எல்.ஆர்.ஜி., உள்ளது. இக்கல்லுாரி 'பி பிளஸ் பிளஸ்' அல்லது 'ஏ பிளஸ்' அங்கீகாரம் பெற முயன்று வருகிறது. இதற்காக, தேசிய தர நிர்ணயக்குழு (நாக் குழு) இரண்டு நாட்கள் ஆய்வு நடத்த உள்ளனர்.
திருப்பூர் பல்லடம் ரோட்டில், கலெக்டர் அலுவலகம் அருகே, எல்.ஆர்.ஜி., அரசு பெண்கள் கல்லுாரி செயல்படுகிறது. கடந்த, 1971 ல் துவங்கப்பட்ட இக்கல்லுாரியில் இளங்கலை படிப்பில், 1,066 பேர், முதுகலையில், 251 பேர் என மொத்தம், 1,317 பேர் பட்டப்படிப்பு பயில்கின்றனர். மாநிலத்தில் அதிக மாணவியர் படிக்கும் அரசுக் கலைக் கல்லுாரிகளில் எல்.ஆர்.ஜி., யும் ஒன்றாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இக்கல்லுாரியில் இணைய மூன்று மடங்கு மாணவியர் கூடுதலாக விண்ணப்பிக்கின்றனர். 2025- 2026ம் கல்வியாண்டில், 1,317 இடங்களுக்கு, 5,600 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
கோவை, பாரதியார் பல்கலை கழகத்தின் கீழ் உள்ள இக்கல்லுாரிக்கு கூடுதல் அடிப்படை உள்கட்டமைப்பு வசதி பெறும் நோக்குடன் 'பி பிளஸ் பிளஸ்' அல்லது 'ஏ கிரேடு' அங்கீகாரம் பெற கல்லுாரி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக, யு.சி.ஜி., க்கு விண்ணப்பித்துள்ளது.
வரும், 27 மற்றும், 28 ம் தேதி இரண்டு நாட்கள் டில்லி, கர்நாடகா, பஞ்சாப், கேரளா மாநிலங்களை சேர்ந்த மூத்த பேராசிரியர் அடங்கிய பல்கலை தேசிய தர நிர்ணயக்குழு கல்லுாரியை பார்வையிட்டு ஆய்வு செய்கிறது.
பத்தாண்டுகளுக்கு பின்..
கடந்த, 2015 ல் கல்லுாரியில் தேசிய தர நிர்ணயக்குழு ஆய்வு நடத்தியது; 2019 ல் கல்லுாரி நிர்வாகம் தரப்பில் விண்ணப்பித்தனர். ஆனால், கொரோனா காலகட்டம் தொடர் விடுமுறை காரணமாக, 2020 ல் குழுவினர் வருகை இல்லாமல் போனது.
தற்போது, பத்து ஆண்டுகள் கழித்து தேசிய தர நிர்ணயக்குழுவினர் கல்லுாரிக்கு வருகை தருகின்றனர். தற்போது, கல்லுாரி 'பி பிளஸ்' அந்தஸ்தில் உள்ளது. குழுவினர் ஒப்புதல் மதிப்பெண் வழங்குவதை பொறுத்து 'பி பிளஸ் பிளஸ்' அல்லது 'ஏ கிரேடு' பெறுமா என்பது தெரியும்.

