/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல் குவாரி - கிரஷர் நிறுவனங்கள்வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்
/
கல் குவாரி - கிரஷர் நிறுவனங்கள்வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்
கல் குவாரி - கிரஷர் நிறுவனங்கள்வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்
கல் குவாரி - கிரஷர் நிறுவனங்கள்வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்
ADDED : ஏப் 23, 2025 06:45 AM
திருப்பூர்; தமிழகம் முழுவதும் இயங்கும் கல் குவாரிகள், ஜல்லி மற்றும் எம்.சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள், 24 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. ஜல்லி எம்-சாண்ட் மற்றும் பி-சாண்ட் உற்பத்தியும் நிறுத்தப்பட்டது.
குவாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் அமைச்சருடன் பேச்சு நடத்தினர். இதில், வரி விதிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பரிசீலனைக்கே இடமில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அதனை சரிக்கட்டும் விதமாக, விலையை உயர்த்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதனால், நேற்று முதல் தங்கள் உற்பத்தி பொருட்களின் விலையை குவாரிகள் உயர்த்தி அமல்படுத்தியுள்ளன. அவ்வகையில், 5 எம்.எம். முதல் 40 எம்.எம்., வரையிலான ஜல்லி, வெட் மிக்ஸ், டஸ்ட் ஆகியன யூனிட், 5 ஆயிரம் ரூபாய். எம்-சாண்ட் யூனிட், 6 ஆயிரம், பி- சாண்ட், 7 ஆயிரம் ரூபாய் மற்றும் 5 சதவீதம் ஜி.எஸ்.டி., என்று உயர்த்தப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இது தவிர வாகன வாடகை என்பது பயண துாரத்தின் அடிப்படையில் வசூலிக்கப்படுகிறது.
இந்த விலை உயர்வு காரணமாக கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள கட்டுமான நிறுவனங்கள்; புரமோட்டர்கள் மற்றும் கட்டட உரிமையாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரெடிமிக்ஸ் விலைமாற்றம் இல்லை
கட்டுமானப் பணிகளில் தற்போது அதிகளவு ரெடிமிக்ஸ் கான்கிரீட் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான ஜல்லி மற்றும் மண் ஆகியவற்றை ரெடிமிக்ஸ் உற்பத்தி நிறுவனங்கள் சொந்தமாக தயாரிக்கின்றன.
ஜல்லி மற்றும் எம்-சாண்ட் விலை உயர்வு இவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இதனால், ரெடிமிக்ஸ் கான்கிரீட் விலை உயர்த்தப்படவில்லை.
இருப்பினும், நேரடியாக ஜல்லி மற்றும் எம்-சாண்ட் வகைகளை சிறிய அளவில் நேரடியாக கட்டடங்களுக்கு சப்ளை செய்யும் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள், குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களைக் கொண்டு இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரும் பெரும் பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, என கல் குவாரி உரிமையா ளர்கள் தெரிவிக்கின்றனர்.

