/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்குவாரி கனிமவள கொள்ளை விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்
/
கல்குவாரி கனிமவள கொள்ளை விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்
கல்குவாரி கனிமவள கொள்ளை விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்
கல்குவாரி கனிமவள கொள்ளை விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 10, 2026 05:43 AM

பல்லடம்: பல்லடம், கொசவம்பாளையம் ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார்.
மாநிலத் தலைவர் சண்முகசுந்தரம், மாநில துணை பொது செயலாளர் கணேசன், சட்ட விழிப்புணர்வு அணி மாநில ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், தகவல் தொழில்நுட்ப அணி மாநில ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்லடம் ஒன்றியம், அனுப்பட்டியில் இயங்கி வரும் தனியார் இரும்பு உருக்கு ஆலையால் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, 1,000 நாட்களுக்கு மேலாக பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். விதிமுறை மீறி இயங்கி வரும் இரும்பு உருக்கு ஆலையை மூட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோடங்கிபாளையத்தில் உள்ள சில கல்குவாரிகளில், சட்ட விதிகளுக்கு புறம்பாக கனிம கொள்ளை, தொடர் வெடி விபத்து, வெடி மருந்து கடத்தல், விவசாய நில அபகரிப்பு, சுற்றுச்சூழல் சீர்கேடு உள்ளிட்டவை நடந்து வருகின்றன.
இவ்வாறு விதிமுறை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
விவசாய சங்க நிர்வாகிகள் மந்த்ராச்சலம், நடராஜ், செல்வராஜ், கார்த்திக் மற்றும் கிருஷ்ணவேணி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

