/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு நீடிக்கும் கல்குவாரி 'ஸ்டிரைக்'
/
பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு நீடிக்கும் கல்குவாரி 'ஸ்டிரைக்'
பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு நீடிக்கும் கல்குவாரி 'ஸ்டிரைக்'
பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு நீடிக்கும் கல்குவாரி 'ஸ்டிரைக்'
ADDED : ஏப் 18, 2025 11:39 PM

பல்லடம்: பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டதன் காரணமாக, கல்குவாரி, கிரஷர் நிறுவனங்களின் வேலை நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளது.
கல்குவாரி மற்றும் கிரஷர் நிறுவனங்களின், 24 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரி, கிரஷர் நிறுவன உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த, 17ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 130 கல்குவாரிகள், 190 கிரஷர் நிறுவனங்கள் உள்ளிட்டவை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக, தினசரி, 5 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, டிப்பர் லாரிகள், அகழ் இயந்திரங்கள், டிராக்டர் உள்ளிட்டவை இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கல்குவாரி மற்றும் கிரஷர் நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் உட்பட, லாரி டிரைவர்களும் வேலைவாய்ப்பை இழந்து வருவாய் இன்றி தவித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்ட கல்குவாரி உரிமையாளர் சங்க செயலாளர் சிவகுமார் கூறியதாவது:
கல்குவாரி, கிரஷர் நிறுவனங்களின், 24 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக, சென்னை சென்று அமைச்சரை சந்தித்து முறையிட்டுள்ளோம். முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என அமைச்சர் உறுதி கூறியுள்ளார். மேலும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை, வரும் ஏப்., 22 அன்று
நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதுவரை, மாநில சங்கத்தின் அறிவுரையின்படி, வேலை நிறுத்த போராட்டம் தொடரும். வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதால், தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு, சிவகுமார் கூறினார்.