/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காலாண்டு தேர்வுகள் பள்ளிகளில் துவக்கம்
/
காலாண்டு தேர்வுகள் பள்ளிகளில் துவக்கம்
ADDED : செப் 19, 2024 10:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள், நேற்று முதல் துவங்கியது.
உடுமலை சுற்றுவட்டாரத்தில் 35 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. நடப்பு கல்வியாண்டுக்கான காலாண்டு தேர்வுகள் நேற்று முதல் துவங்கியது.
நேற்று பிளஸ் 1, 2 மேல்நிலை வகுப்புகளுக்கு தேர்வு துவங்கியது. இன்று, ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் தேர்வு துவங்குகிறது.
காலாண்டுத்தேர்வுகள் செப்., 27ம் தேதி நிறைவடைகிறது. செப்., 28ம் தேதி முதல் அக்., 2ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.