/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மேல்நிலைப்பள்ளிகளில் காலாண்டு தேர்வு துவக்கம்
/
மேல்நிலைப்பள்ளிகளில் காலாண்டு தேர்வு துவக்கம்
ADDED : செப் 10, 2025 09:53 PM

உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதி மேல்நிலைப்பள்ளிகளில், காலாண்டுத்தேர்வு நேற்று துவங்கியது.
உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரங்களில், 35 அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. நடப்பு கல்வியாண்டுக்கான காலாண்டுத்தேர்வு மேல்நிலைப்பள்ளிகளில் நேற்று துவங்கியது.
குறிப்பாக பிளஸ் 1, 2 வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முதல் இத்தேர்வு நடக்கிறது. மேல்நிலை வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுக்கு தயாராவதற்கான முதற்கட்டமாக மாணவர்களை காலாண்டு தேர்வுக்கும் ஆசிரியர்கள் தீவிரமாக தயார்படுத்துகின்றனர்.
பொதுத்தேர்வு நடைமுறையை பின்பற்றி, காலாண்டுத்தேர்வுகளையும் நடத்துகின்றனர். ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு, வரும் 15ம் தேதி முதல் துவங்குகிறது. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வரும் 26ம் தேதியுடன் தேர்வு நிறைவடைகிறது. 27ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை விடப்படுகிறது.