/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வினாடி - வினா போட்டி நாளை மறுநாள் துவக்கம்
/
வினாடி - வினா போட்டி நாளை மறுநாள் துவக்கம்
ADDED : ஜூலை 04, 2025 11:14 PM
திருப்பூர்; அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றல் திறனை அறிந்து கொள்ள வினாடி வினா போட்டி நடத்தப்படுகிறது.
நடப்பு கல்வியாண்டுக்கான முதல்கட்ட போட்டி 7ல் துவங்கி, 18ம் தேதி வரை நடக்கிறது. 2ம் கட்டமாக, ஆக., 4 - 18; 3ம் கட்டமாக, நவ., 3 - 14 மற்றும் 4ம் கட்டமாக ஜனவரி, 27 - 30 வரை நடக்கவுள்ளது.
இந்த போட்டியில், மாவட்ட அளவில் வென்று, மாநில போட்டிக்கு செல்பவர்; மாநில அளவில் வெல்லும் போது,கல்வித்துறையின் வெளிநாட்டுச் சுற்றுலாவில் பங்கேற்க தேர்வு ஆவர் என்பதால், கல்வித்துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, அதற்கேற்பவிநாடி வினா தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்,' என, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.