/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முயல் வேட்டை: 12 பேர் கைது ரூ.30 ஆயிரம் அபராதம்
/
முயல் வேட்டை: 12 பேர் கைது ரூ.30 ஆயிரம் அபராதம்
ADDED : ஜூலை 16, 2025 11:14 PM
திருப்பூர்; ஊத்துக்குளி, நொச்சிக்காட்டில் சிலர் கும்பலாக இரவு நேரங்களில் முயல்களை வேட்டையாடுவது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
வனச்சரக அலுவலர் நித்யா தலைமையில், வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, வேட்டையாடி கொண்டிருந்த, 12 பேரை பிடித்தனர். விசாரணையில், ஈட்டிவீரம்பாளையத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. வழக்கு பதிவு செய்து, 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நான்கு முயல்களை பறிமுதல் செய்தனர்.
வனச்சரக அலுவலர் நித்யா கூறுகையில், அட்டவணைப்படுத்தப்பட்ட வன உயிரினங்களான மயில், மான், முயல் போன்றவற்றை வேட்டையாடுவது வன உயிரின பாதுகாப்பு சட் டம், 1972ன் படி குற்றம். வன உயிரினங்களை வேட்டையாட கூடாது. மீறினால் சட்டப்படி கடுமையானநடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.