/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
/
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
ADDED : ஜூலை 01, 2025 09:57 PM
உடுமலை; கால்நடைத்துறை சார்பில், கால்நடைகளுக்கு, இன்று முதல், 31 வரை, கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடக்கிறது.
கால்நடைகளுக்கு, கால் மற்றும் வாய் நோய் அல்லது காணை என அழைக்கப்படும், கோமாரி நோய் வைரஸ் நச்சு உயிரியால் ஏற்படுகிறது.
பொதுவாக, கலப்பின மாடுகளை, கால் மற்றும் வாய் கோமாரி நோய் அதிகம் தாக்கி, கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளது.
இந்நோய் தாக்காமல் தடுக்கும் வகையில், கால்நடைத்துறை, ஆறு மாதத்திற்கு ஒருமுறை, என ஆண்டுக்கு இரு முறை இலவசமாக அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
நடப்பாண்டு, தேசிய கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ், 7வது சுற்று, கோமாரி நோய் தடுப்பூசி முகாம், இன்று (2ம் தேதி) துவங்குகிறது.
வரும் 31ம் தேதி வரை, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள கிராமங்கள், குக்கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும், கால்நடை நிலையங்கள் வாயிலாக சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது.
இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறும், மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவர்களை தொடர்பு கொள்ளலாம், என கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.