/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொலிவு பெறும் ரவுண்டானா; பணிகள் தீவிரம்
/
பொலிவு பெறும் ரவுண்டானா; பணிகள் தீவிரம்
ADDED : செப் 18, 2024 08:51 PM

உடுமலை : பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா பூங்காவில், சிலைகள் அமைத்து பொலிவுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
உடுமலை நகராட்சி நுாற்றாண்டு விழாவையொட்டி, நகர மேம்பாட்டு பணிகளுக்கு தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்தது. இழுபறியாக ஒவ்வொரு பணிகளும் நடைபெற்று வருகிறது.
அவ்வகையில், பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா பூங்கா மேம்படுத்தப்பட்டு வருகிறது. முன், பஸ் ஸ்டாண்ட் சந்திப்பில் அதிக நெரிசல் நிலவி வந்தது. பிரச்னைக்கு தீர்வு காண அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.
பின்னர் ரவுண்டானா அமைத்தனர். தற்போது, அப்பகுதியில், மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பஸ் ஸ்டாண்ட் நுழைவாயிலில் இருந்து அண்ணாதுரை சிலை இடம் மாற்றப்பட்டது.
பூங்காவில் ஏறு தழுவுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தும் வகையில், சிலை நிறுவப்பட்டுள்ளது. புல்தரையும், தமிழ் எழுத்துகளும் பதித்துள்ளனர்.
இதே போல், புது பஸ் ஸ்டாண்ட் சுவரிலும், அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டு வருகிறது.

