/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ராகுல் பிறந்த நாள் விழா காங்., கொண்டாட்டம்
/
ராகுல் பிறந்த நாள் விழா காங்., கொண்டாட்டம்
ADDED : ஜூன் 21, 2025 12:40 AM

பல்லடம் : பல்லடம் நகர காங்., கட்சி சார்பில் ராகுல் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நகரத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கணேசன், நகர நிர்வாகிகள் சக்திவேல் ராமச்சந்திரன், நரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராயர்பாளையம் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு சிலேட், பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதேபோல், காங்., வர்த்தக அணி சார்பில், பல்லடம் பொங்காளியம்மன் கோவிலில், ராகுல் பெயருக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கு வேட்டி, சட்டை மற்றும் பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன.
வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் மணிராஜ் தலைமை வகித்தார். நகர தலைவர் சுரேஷ், மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணகுமார், வட்டாரத் தலைவர் தர்மமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.