ADDED : ஏப் 06, 2025 01:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூரில் ரயில்வே ஸ்டேஷனை முற்றுகையிட்ட, 84 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்திமனிதநேய ஜனநாயககட்சி சார்பில் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முற்றுகை போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராயல் ராஜா தலைமையில் ஏராளமானோர் ஸ்டேஷன் முன்பு திரண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து, ரயில்வே ஸ்டேஷனை நோக்கி சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதன்பின், 84 பேரை போலீசார் கைது செய்தனர்.