/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழை எதிரொலி: தக்காளி விலை உயர்வு
/
மழை எதிரொலி: தக்காளி விலை உயர்வு
ADDED : அக் 25, 2025 01:11 AM
பொங்கலுார்: ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
அதிக விளைச்சல் காரணமாக தக்காளி விலை சரிவு ஏற்பட்டது. 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி, 100 முதல், 150 ரூபாய் வரை விலை போனது. விலை மிகவும் சரிந்ததால் உற்பத்திச் செலவை கூட ஈடுகட்ட முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.
கடந்த இரு வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி அழுகத் துவங்கியுள்ளது. சேதம் அதிகரிக்க துவங்கியதை அடுத்து வரத்து சரிந்து வருகிறது. இதன் காரணமாக ஒரு பெட்டி தக்காளி, 300 ரூபாய் வரை விலை போகிறது.
பருவமழை துவங்கியுள்ளதால் வரும் நாட்களில் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, பழங்கள் அழுகுவது அதிகரிக்கும். அப்பொழுது விலை உயர்வு தவிர்க்க முடியாததாக இருக்கும். தக்காளி விலையை இன்னும் இரண்டு மாதத்திற்கு பருவ மழையே தீர்மானிக்கும்.

