/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பருவமழைக்கு மானாவாரி சாகுபடி; தயாராகும் பாசன விவசாயிகள்
/
பருவமழைக்கு மானாவாரி சாகுபடி; தயாராகும் பாசன விவசாயிகள்
பருவமழைக்கு மானாவாரி சாகுபடி; தயாராகும் பாசன விவசாயிகள்
பருவமழைக்கு மானாவாரி சாகுபடி; தயாராகும் பாசன விவசாயிகள்
ADDED : செப் 24, 2024 11:46 PM

உடுமலை : உடுமலை சுற்றுப்பகுதியில், பி.ஏ.பி., அமராவதி பாசனத்துக்கும், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை சீசனில், மானாவாரியாகவும், பல ஆயிரம் ஏக்கரில் விவசாய சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
பி.ஏ.பி., மண்டல பாசனத்தில், சுழற்சி முறையில், பாசனத்துக்கு தண்ணீர் வழங்குவதால், பாசனம் இல்லாத பகுதிகளில், மானாவாரி சாகுபடி மட்டுமே மேற்கொள்ள முடியும்.
தற்போது, பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பிற பகுதியிலுள்ள விளைநிலங்களில், வடகிழக்கு பருவமழை சீசனில், கொண்டைக்கடலை, கொத்தமல்லி சாகுபடி செய்வது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக, மானாவாரியாக மக்காச்சோளம் சாகுபடி செய்யவும் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே, பருவமழை துவங்கும் முன், விளைநிலத்தை உழுது தயார்படுத்தி வருகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: மக்காச்சோளம் நடவுக்கு முன், விளைநிலத்தை தயார்படுத்தும் வகையில், உழவு செய்து வருகிறோம்.
முன்னதாகவே உழவு செய்வதால், மண்ணிலுள்ள கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படுவதுடன், மழைக்காலங்களில், அதிக நீர்பிடிப்பு திறனும் இருக்கும். களைகளையும் கட்டுப்படுத்த முடியும். குறித்த நேரத்தில், பருவமழை துவங்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.
இவ்வாறு, தெரிவித்தனர்.