/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழை... வெயில்... புழுக்கம்! சட்டென்று மாறுது வானிலை
/
மழை... வெயில்... புழுக்கம்! சட்டென்று மாறுது வானிலை
மழை... வெயில்... புழுக்கம்! சட்டென்று மாறுது வானிலை
மழை... வெயில்... புழுக்கம்! சட்டென்று மாறுது வானிலை
ADDED : அக் 09, 2024 12:29 AM

திருப்பூர் : தமிழகத்தில், வட கிழக்குப்பருவ மழை பரவலாக பெய்ய துவங்கிய நிலையில், திருப்பூரிலும் அவ்வப்போது வெயில், மழை என மாறி, மாறி வானிலை தென்படுகிறது. இதற்கிடையில், தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில், திருப்பூர் மாவட்டத்தின் வாராந்திர அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த இரு வாரமாக அதிகபட்ச வெப்பநிலை, 35 முதல், 36 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை, 23 முதல், 25 டிகிரி செல்சியஸ் வரை நிலவி வருகிறது. இந்த மாறுபட்ட வானிலையில் பகல் நேரங்களில் கடும் வெயில் சுடுகிறது; அலுவலகம், கல்லுாரி செல்லும் பெண்கள் பலர், வெயில், மழைக்கு குடை பயன்படுத்துகின்றனர்.
இரவில், மழை வெளுத்து வாங்குகிறது. சில நேரங்களில், புழுக்கமும் அதிகரித்திருக்கிறது. மாறுபட்ட வானிலையில், அதற்கேற்ப, மக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்கின்றனர்.