/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வானவில் மன்ற போட்டி; மாணவர்கள் பங்கேற்க அழைப்பு
/
வானவில் மன்ற போட்டி; மாணவர்கள் பங்கேற்க அழைப்பு
ADDED : அக் 23, 2024 12:11 AM
உடுமலை : அரசுப்பள்ளிகளில் உள்ள வானவில் மன்றத்தின் சார்பில், மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதத்திறனை ஊக்குவிக்கும் போட்டிகள், அறிவிக்கப்பட்டுள்ளன.
அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித திறன்களை ஊக்குவிக்கும் வகையில், வானவில் மன்றம் செயல்படுத்தப்படுகிறது. இந்த மன்றத்தில் மாணவர்களுக்கு அறிவியல், கணிதம் சார்ந்த பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கல்வியாண்டு தோறும், இந்த மன்றத்தின் சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
நடப்பாண்டு போட்டிக்கான கருப்பொருள், 'சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கணிதம்' மற்றும் 'அறிவியலின் அணுகுமுறைகள்' என்ற தலைப்பில் போட்டிகள் நடத்த கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி அளவிலான போட்டிகள் அக்.,20 முதல் 28ம் தேதி வரையும், வட்டார அளவிலான போட்டிகள், நவ., 1 முதல் 8 வரையும், மாவட்ட அளவில் நவ., 10 முதல் 20 வரையிலும், மாநில அளவிலான போட்டி நவ., மாத இறுதியிலும் நடக்கிறது.
மாணவர்கள், தங்களின் அறிவியல் ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில், போட்டி செயல் வடிவில் இடம் பெற வேண்டும். போட்டிகள் குழு செயல்பாடாக மட்டுமே இருக்க வேண்டும்.
சிறப்புக்கவனம் தேவைப்படும் மாற்றுத்திறனாளி மாணவர்களும், இந்த போட்டிகளில் இடம் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு போட்டிக்கான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளி அளவில் அதிகப்பட்சம் 5 குழுக்கள் தேர்வு செய்யப்படுகிறது. வட்டார அளவில் 4 குழுக்களும், மாவட்ட அளவில் 4 குழுக்களும் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுகின்றனர்.
இப்போட்டிகளை ஒருங்கிணைந்து நடத்துவதற்கு, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவித்துள்ளது. உடுமலை வட்டார பள்ளிகளில் இப்போட்டிகளுக்கான குழுத் தேர்வு நடக்கிறது.
இதில், மாணவர்கள் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.