ADDED : அக் 14, 2025 12:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர் மனிஷ் நாரணவரே துவக்கிவைத்தார். எல்.ஆர்.ஜி., கல்லுாரி மாணவியர், மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் பொறித்த பதாகைகளை ஏந்தியவாறு, கலெக்டர் அலுவலகம் முதல் அருகாமையிலுள்ள தங்கள் கல்லுாரி வரை சென்று திரும்பினர்.
'மழைநீரை, மணல் வடிப்பான் வாயிலாக சுத்தி கரித்து, தண்ணீர் தொட்டியில் சேமித்து பயன்படுத்தலாம்; தரைமட்ட நீர் தேக்க தொட்டியிலும் சேமிக்கலாம்' என, கலெக்டர் அறிவுறுத்தினார்.