/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காங்கயம் சாலையில் மழைநீர் தேங்காது
/
காங்கயம் சாலையில் மழைநீர் தேங்காது
ADDED : டிச 27, 2024 11:47 PM

திருப்பூர், ; காங்கயம் ரோட்டில், நல்லுாரில் மழை நீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில் சிறுபாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர் - காங்கயம் ரோடு, நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ரோடு விரிவாக்கம் செய்து அகலப்படுத்தப்பட்டுள்ளது.
ரோட்டில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் மையத் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. நகர எல்லையில் இந்த ரோட்டில் மழை நீர் வடிகால் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நல்லுாரில் ரோட்டோரத்தில், ஒரு பகுதி தாழ்வானதாக உள்ளது. இதனால், மழை பெய்யும் போது, இந்த இடத்தில் மழை நீர் தேங்கி நிற்பது வாடிக்கையாக உள்ளது.
நாட்கணக்கில் தேங்கி நிற்கும் மழை நீர் காரணமாக ரோடு சேதமடை வதும், வாகன ஓட்டிகள் அவதிப்படுவதும் வழக்கமாக இருந்தது.
இதற்கு தீர்வு காணும் வகையில், ரோட்டின் ஒரு புறத்தில் தேங்கி நிற்கும் மழை நீர் மறுபுறம் செல்லும் வகையில், ரோட்டின் குறுக்கில், வடிகால் அமைத்து சிறுபாலம் கட்ட திட்டமிடப்பட்டது.
அவ்வகையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்த பாலம் கட்டும் பணி துவங்கியுள்ளது. இதற்காக ரோட்டின் ஒரு பகுதியில் போக்குவரத்து தடை செய்து பணி நடக்கிறது. இப்பகுதியில் பணி முடிந்த பின், வாகனப் போக்குவரத்து மறுபுறத்தில் தடை செய்து சிறுபாலம் கட்டும் பணி செய்து முடிக்கப்படவுள்ளது.
ரோட்டை கடந்து கொண்டு செல்லப்படும் மழை நீர், சற்று தள்ளி அமைந்துள்ள பிரதான கால்வாயில் இணைக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.

