ADDED : நவ 11, 2024 04:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சபா மண்டபத்தில், தேவாரத்தை மீட்டெடுத்து திருமுறை கண்ட ராஜராஜ சோழனின் 1039வது ஐப்பசி சதயப்பெருவிழா நேற்று நடந்தது. ராஜராஜ சோழனைப் போற்றும் விதமாக, சம்பந்தர், அப்பர், சுந்தரர் அருளிய திருப்பதிகங்கள் முழுவதும் ஓதிய பலனைத் தரக்கூடிய அகத்தியர் தேவாரத் திரட்டு பண்ணொன்ற விண்ணப்பித்தல் நிகழ்ச்சி நடந்தது.
கரூர் குமாரசாமிநாத தேசிகர் தலைமையில் ஓதுவா மூர்த்திகள் மற்றும் பக்க இசைக் கலைஞர்கள் பண்ணிசை மரபோடு முற்றோதுதல் மேற்கொண்டனர். முன்னதாக திருமுறைகண்ட விநாயகர், நால்வர் பெருமக்களுக்கு அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. அரன் பணி அறக்கட்டளையினர் ஏற்பாட்டில் கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், அறங்காவலர் குழுவினர் ஆகியோர் செய்தனர்.