/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ராக்காத்தம்மன் கோவில் மகா கும்பாபிேஷகம்
/
ராக்காத்தம்மன் கோவில் மகா கும்பாபிேஷகம்
ADDED : பிப் 16, 2025 11:50 PM

அவிநாசி; அவிநாசி, சேவூர் ரோடு, செங்காடு பகுதியில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த ராக்காத்தம்மன் கோவில் இருந்தது.
அவிநாசி - சத்தியமங்கலம் மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக கடந்த ஆண்டு கோவில் அகற்றப்பட்டது. அதே பகுதியில், வேறு இடத்தில் பழமையான கோவிலில் இருந்து அகற்றப்பட்ட கற்களைப் பயன்படுத்தப்பட்டு புதிய கோவில் கட்டப்பட்டது.
இக்கோவிலில் நேற்று காலை மகா கும்பாபிஷேகம், அவிநாசி திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் காமாட்சி தாச சுவாமிகள் தலைமையில் நடந்தது. நான்காம் கால பூஜையில், விநாயகர் வழிபாடு, மூல மந்திர ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியவை நடந்தன.
கோவில் விமான கலசத்திற்கு கும்பாபிஷேகம், தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்பணிக்குழு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

