/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ராக்காத்தம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
/
ராக்காத்தம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED : பிப் 15, 2025 07:33 AM

அவிநாசி; அவிநாசி, சேவூர் ரோடு, செங்காட்டில் எழுந்தருளியுள்ள ராக்காத்தம்மன் கோவிலில், நாளை கும்பாபிஷேகம் நடப்பதை முன் னிட்டு, 300க்கும் மேற்பட்டோர் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
இக்கோவிலில் கும்பாபிேஷகம் நாளை காலை, 9:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள், அவிநாசி திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய காமாட்சி தாச சுவாமிகள் தலைமையில் நடைபெறுகிறது.
இதனையொட்டி, நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து, 300 பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அதன்பின், விநாயகர் வழிபாடு, மூலமந்திர ஹோமம், கோ பூஜை, மகாலட்சுமி, நவகிரக ஹோமங்களுடன் முதல் கால யாக பூஜையும் நடைபெற்றது. இன்று காலை மற்றும் மாலையில், 2, 3ம் கால யாக பூஜையும், நாளை காலை கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு, நாளை காலை, 7:00 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.