/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பாரம்பரியம் - நவீன வாழ்க்கை இணைக்கும் யோகா பயிற்சிகள் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் பெருமிதம்

ADDED : செப் 27, 2024 11:27 PM

திருப்பூர்: திருப்பூரில் ஸ்கை யோகா பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றி தழ் வழங்கப்பட்டது.
திருப்பூர் மனவளக்கலை அறக்கட்டளை சார்பில், ஸ்கை யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயிற்சி எடுத்தனர். வேதாத்திரி மகரிஷி கருத்துருவாக்கம் செய்த ஸ்கை யோகா, தியானம் உள்ளிட்ட பயிற்சிகள் இதில் வழங்கப்பட்டது.
பயிற்சி நிறைவு விழாவில், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ் கலந்து கொண்டு, பயிற்சி சான்றிதழ்களை வழங்கிப் பேசியதாவது:
பாரம்பரிய நடைமுறைகளை நம் நவீன வாழ்க்கையுடன் இணைப்பதில் இந்த பயிற்சிகள் முக்கியத்துவும் வகிக்கின்றன. இப் பயிற்சிகள் உடலை மட்டுமின்றி, மனம், ஆன்மாவை வளர்க்கும் ஒரு விரிவான அணுகு முறை.
இது சமூகத்துக்கு சிறப்பான பங்களிப்பை வழங்குவதோடு, தனிப்பட்ட வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைக்கும். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும் பலன்களை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.