/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரப்திசாகர், கோர்பா ரயில்கள் 6 நாட்களுக்கு ரத்து
/
ரப்திசாகர், கோர்பா ரயில்கள் 6 நாட்களுக்கு ரத்து
ADDED : பிப் 01, 2025 12:23 AM
திருப்பூர்; தெலுங்கான மாநிலம், செகந்திராபாத்தில் நடைபெற உள்ள பொறியியல் மேம்பாட்டு பணி காரணமாக, கொச்சுவேலி மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் ரப்திசாகர், கோர்பா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
செகந்திராபாத், காசிபேட்டை - விஜயவாடா இடையே, கம்மம் ரயில்வே ஸ்டேஷனில் பொறியியல் மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால், தென்மத்திய ரயில்வே ரயில் இயக்கங்களின் மாற்றங்களை அறிவித்துள்ளது.
அதன்படி, வரும், 3, 6 மற்றும், 10ம் தேதிகளில், கொச்சுவேலி(கேரளா) - கோர்பா(சட்டீஸ்கர்) எக்ஸ்பிரஸ் (எண்:22648); வரும், 5, 8 மற்றும், 12 ஆகிய தேதிகளில், கோர்பா - கொச்சுவேலி (எண்:22647) ரத்து செய்யப்படுகிறது. கோரக்பூரில் இருந்து திருவனந்தபுரம் வரும் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் (எண்:12511) வரும் பிப்., 7 மற்றும், 9ம் தேதி இயங்காது. இதனால், பிப்., 11 மற்றும், 12ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து கோரக்பூருக்கு இயக்கப்படும் சூப்பர்பாஸ்ட் ரயிலும் (எண்:12512) இயங்காது.
பொறியியல் பணியால், நிஜாமுதீன் - கன்னியாகுமரி, நிஜாமுதீன் - எர்ணாகுளம், இந்துார் - திருவனந்தபுரம் உள்ளிட்ட ரயில்கள் பயணிக்கும் வழித்தடமும் மேற்கண்ட நாட்களில் மாற்றப்படுவதாக, தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.