/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நவீன மங்கையரை கவரும் 'ரஸ்விரிடி' சேலை ரகங்கள்
/
நவீன மங்கையரை கவரும் 'ரஸ்விரிடி' சேலை ரகங்கள்
ADDED : ஜன 25, 2024 06:19 AM
திருப்பூர் : 'ரஸ்விரிடி' என்ற பெயரில் சேலை மற்றும் சல்வார் கண்காட்சி மற்றும் விற்பனை இன்றும், நாளையும், (26ம் தேதி), திருப்பூர், பார்ச்சூன் பார்க் ஓட்டல் அரங்கில் நடக்கிறது.
இது குறித்து, அதன் உரிமையாளர் சந்தீப் கூறியதாவது: இக்கால பெண்கள், நாகரிகம் என்ற பெயரில் சேலை அணிய தயங்குகின்றனர். 'புடவை அணிவது, அந்த கால ஸ்டைல்' என்ற அவர்களின் மனநிலையை மாற்றும் வகையில் காஞ்சிபுரம் பட்டு, பனாரஸ் போன்ற சேலைகளில், நாங்களே புதிய வடிவமைப்புகளை ஏற்படுத்துகிறோம்.
அதாவது, ஓவியம், கலம்காரி, மதுபனி, ஷிப்போரி முறையில், சேலைகளில் ஓவிய வடிவமைப்புகளை புகுத்தி, இளம் தலைமுறையினரை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். சிலர், திருமணம் உட்பட சுப நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தான் சேலை அணிகின்றனர்.
இந்த 'டிரெண்டை' மாற்றி, அலுவலகம் செல்லும் பெண்கள் கூட, தங்களின் தினசரி பயன்பாட்டில் சேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான வடிவமைப்பு நிறைந்த சேலைகளை அறிமுகப்படுத்தி உள்ளோம். இக்கண்காட்சி மற்றும் விற்பனையில், அனைத்து ரக சேலைகளும் கிடைக்கும். விபரங்களுக்கு, 97910 19322 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினர்.