/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷன் கார்டுதாரர்கள் குறைகேட்பு கூட்டம்
/
ரேஷன் கார்டுதாரர்கள் குறைகேட்பு கூட்டம்
ADDED : ஜன 23, 2025 12:18 AM
திருப்பூர்; வரும் 25 தேதி, ரேஷன் குறை கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
அவிநாசியில் அ.குரும்பபாளையம், தாராபுரம்- - சூரியநல்லுார், காங்கயம் -- எல்லப்பம்பாளையம்புதுார், மடத்துக்குளம்- - பாலப்பம்பட்டி, திருப்பூர் வடக்கு- - நெருப்பெரிச்சல், திருப்பூர் தெற்கு - விஜயாபுரம், உடுமலை- - சின்ன வீரம்பட்டி, ஊத்துக்குளி - கே.274 ஊத்துக்குளி ஆகிய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும்; பல்லடத்தில், பணிக்கம்பட்டி ஊராட்சி அலுவலக இ-சேவை மையத்திலும் குறைகேட்பு கூட்டம் நடைபெறும்.
காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடைபெறும் முகாமில் அனைத்து குடிமைப்பொருள் தனி தாசில்தார், பொது வினியோகம் சார்ந்த மனுக்களை பெறுகின்றனர். முகாமில், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் எண் பதிவு மற்றும் மாற்றம் செய்வதற்கான மனுக்களை அளிக்கலாம்.

