/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷன் குறைகேட்பு இன்று நடக்கிறது
/
ரேஷன் குறைகேட்பு இன்று நடக்கிறது
ADDED : ஜூலை 12, 2025 12:43 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒன்பது தாலுகாக்களிலும், ரேஷன் குறைகேட்பு கூட்டம், இன்று , காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடைபெற உள்ளது. குடிமைப்பொருள் தனி தாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்று, ரேஷன் கார்டுதாரர்களிடமிருந்து மனுக்களை பெற்று, தீர்வு ஏற்படுத்த உள்ளனர்.
அவிநாசியில், வேட்டுவபாளையம்; தாராபுரத்தில், நந்தவனம்பாளையம்; காங்கயத்தில், லக்குமநாயக்கன் பட்டி; மடத்துக்குளத்துக்கு கொமரலிங்கம்; திருப்பூர் வடக்கு தாலுகாவில், வேலம்பாளையம்; உடுமலையில், தீபாலபட்டி; ஊத்துக்குளியில் தளவாய்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கூட்டம் நடைபெறும். பல்லடம் தாலுகாவில், சித்தம்பலம் ஊராட்சி அலுவலக இ - சேவை மையத்திலும், திருப்பூர் தெற்கு தாலுகாவில், பலவஞ்சிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் , முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், போன் எண் பதிவு மற்றும் புதிய கார்டு, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், மின்னணு குடும்ப அட்டை குறித்த கோரிக்கைகளை அளிக்கலாம்.

