ADDED : செப் 03, 2026 03:47 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இன்று முதல் வெங்காயம் விற்கப்பட உள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் பிரபு அறிக்கை:
தமிழக அரசின் உத்தரவின்படி, வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், திருப்பூர் மாவட்டத்தில், 25 மெட்ரிக் டன் வெங்காயம் கூட்டுறவுத்துறை நடத்தும், 369 நகர்புற ரேஷன் கடைகள் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளது. இன்று முதல் (3ம் தேதி) இவ்விற்பனை துவங்குகிறது. ஒரு கிலோ வெங்காயம், 35 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் மட்டுமே வழங்கப்படும். மக்களின் நலன் கருதி செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
