/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சொத்து வரி உயர்வு மறு பரிசீலனை?
/
சொத்து வரி உயர்வு மறு பரிசீலனை?
ADDED : பிப் 17, 2025 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் எம்.பி.,சுப்பராயன் நேற்று கூறியதாவது:
திருப்பூரில் சில பகுதிகளில் வீட்டுமனைப்பட்டா வழங்குவது; சொத்து வரி உயர்வு மறு பரிசீலனை போன்றவை குறித்து அரசு விரைவில் அறிவிக்கும்.
வீரபாண்டி முதல் அம்மாபாளையம் வரை மேம்பாலம் அமைத்தல் உள்ளிட்ட திட்டம் அடங்கிய மாஸ்டர் பிளான் அமைக்க வேண்டும். நிபுணர் குழு அமைத்து நகரின் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணும் திட்டம் வகுக்க வேண்டும்.
இ.எஸ்.ஐ., மருத்துவமனை செயல்பாடு குறித்து விரைவில் நேரில் சென்று ஆய்வு நடத்தப்படும். தெருநாய் பிரச்னை மற்றும் பாதிப்புக்கு நஷ்ட ஈடு வழங்குவது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

