/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெருநகரங்களில் வாசிப்பு பழக்கம் பின்னடைவு; அண்ணாமலை வேதனை
/
பெருநகரங்களில் வாசிப்பு பழக்கம் பின்னடைவு; அண்ணாமலை வேதனை
பெருநகரங்களில் வாசிப்பு பழக்கம் பின்னடைவு; அண்ணாமலை வேதனை
பெருநகரங்களில் வாசிப்பு பழக்கம் பின்னடைவு; அண்ணாமலை வேதனை
ADDED : ஜூலை 15, 2025 11:11 PM

வெள்ளகோவில்; வெள்ளகோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சார்பில், வெள்ளகோவில் புத் தக திருவிழா நடந்தது. பல்வேறு தலைப்பில் பேசினர்.
நிறைவு விழாவில், பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று 'அச்சம் தவிர்' என்ற தலைப்பில் பேசியதாவது:
புத்தக திருவிழாவில் ஆயிரக்கணக்கான புத்தகங்களை மக்கள் வாங்கியும், படித்தும் இருப்பார்கள். புத்தகம் படிக்கும் போது, எங்கோ இருக்கின்ற புத்தகம், மனதில் ஒரு பொறியை தட்டி இருக்கும்.
இந்த பிரபஞ்சத்தை புத்தகம், குழந்தைகள் முன் நிறுத்தும். காலத்தை கடந்த கதைகள் எல்லாம் படித்து இருப்பர். ஒவ்வொரு புத்தக திருவிழாவும், மனிதனிடம் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
மனிதனுக்கு நல்ல பரிசு கொடுக்க வேண்டும் என்றால், பொன்னும், பொருளும் கொடுத்தால் ஒரு காலத்தில் விலை இல்லாமல் சென்று விடும். ஆனால், நல்ல புத்தகத்தை கொடுக்கும் போது, நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
கஷ்டமான சூழலில் எடுத்து படிப்போம். வாசிப்பு பழக்கம், பெருநகரங்களில் பின்னோக்கி சென்று வருவது வேதனையாக இருக்கிறது.
மொபைல் போன் வந்த பின், சமூக வலைதளங்களின் தாக்கத்தில் குழந்தைகள் உள்ளனர். புத்தகத்தை எடுத்து படிக்கும் நேரம் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். குழந்தையிடம் மாற்றத்தை கொண்டு வர, புத்தகத்தை கொடுக்க வேண்டும். கல்வியை தாண்டி, இன்னொரு உலகத்தை அறிமுகம் படுத்தும் புத்தகத்தை படிப்பதில்லை. இன்று கல்வியை தாண்டி, வாசிப்பு அவசியமான ஒன்று.
அச்சம் என்பது வாழ்க்கையாக மாறும் போது தான், பிரச்னை ஆரம்பிக்கும். தேவையில்லாத அச்சத்தை தவிர்க்க வேண்டும். தேவையான அச்சம் என்பது, வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு செல்ல நிச்சயம் உதவும்.
இவ்வாறு, அவர் பேசினார்.