/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி வகுப்பு
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி வகுப்பு
ADDED : ஜன 21, 2025 10:17 PM

உடுமலை; அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்புக்கு, முக்கியத்துவம் அளிப்பதற்கு தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. தற்போது மாநில அடைவு ஆய்வும், அடுத்த மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் மாணவர்களின் எழுதுதல், கற்றல் மற்றும் வாசிப்புத்திறன்களும் அளவிடப்படுகிறது. இந்த ஆய்வுக்கு அரசு பள்ளிகள் தயாராகும் வகையில், தற்போது மாதிரி தேர்வுகளும் தொடர்ந்து நடத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, உடுமலை வட்டார அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி வகுப்பு நடக்கிறது. ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், நேற்று மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி சிறப்பு வகுப்பு நடந்தது. மாணவர்களுக்கு வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து தலைமையாசிரியர் தங்கவேல், ஆசிரியர் கல்பனா எடுத்துரைத்தனர். பயிற்சி வகுப்புகளை வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம் பார்வையிட்டார்.