/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆயத்த ஆடை ஏற்றுமதி 11.9 சதவீத வளர்ச்சி கடந்த மாதம் ரூ.10,639 கோடிக்கு வர்த்தகம்
/
ஆயத்த ஆடை ஏற்றுமதி 11.9 சதவீத வளர்ச்சி கடந்த மாதம் ரூ.10,639 கோடிக்கு வர்த்தகம்
ஆயத்த ஆடை ஏற்றுமதி 11.9 சதவீத வளர்ச்சி கடந்த மாதம் ரூ.10,639 கோடிக்கு வர்த்தகம்
ஆயத்த ஆடை ஏற்றுமதி 11.9 சதவீத வளர்ச்சி கடந்த மாதம் ரூ.10,639 கோடிக்கு வர்த்தகம்
ADDED : செப் 19, 2024 10:19 PM

திருப்பூர்:இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், கடந்த மாதம், 10 ஆயிரத்து 639 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளதாக, ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அளவில் நிலவிய பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் மறைந்து, இயல்புநிலை திரும்பி உள்ளது. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சில்லரை வர்த்தகம் வழக்கம்போல் களை கட்டி உள்ளது.
இதனால், இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், கடந்த ஐந்து மாதங்களாக வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து மாதங்களில் மட்டும், 53 ஆயிரத்து 431 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது. கடந்த மாதம், 10 ஆயிரத்து 639 கோடி ரூபாய்க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது; இது, 2023 மற்றும் 2022 ஆகஸ்ட் மாதம் நடந்த ஆயத்த ஆடை ஏற்றுமதியை காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023 ஆகஸ்ட் மாதம், 9,839 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்தது. 2022 ஆகஸ்ட் மாதம், 9,816 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்தது. கடந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களில், 49 ஆயிரத்து 135 கோடி ரூபாய்க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது.
இந்த நிதியாண்டில், அதே காலகட்டத்தில் 55 ஆயிரத்து 482 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் பொழுது, 11.9 சதவீதம் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக, ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தென் பிராந்திய பொறுப்பாளர் சக்திவேல் கூறியதாவது:
கடந்த ஐந்து மாதங்களாக, ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி அடைந்து வருவது புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 11.9 சதவீதம் வர்த்தகம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஏற்றுமதி வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி என்பது இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அபார வளர்ச்சி அடைவதற்கான அறிகுறியாகவே கருதுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.