/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆயத்த ஆடை ஏற்றுமதி 11.9 சதவீதம் உயர்வு: கோடை கால ஆர்டர்கள் கைகொடுத்ததால் உற்சாகம்
/
ஆயத்த ஆடை ஏற்றுமதி 11.9 சதவீதம் உயர்வு: கோடை கால ஆர்டர்கள் கைகொடுத்ததால் உற்சாகம்
ஆயத்த ஆடை ஏற்றுமதி 11.9 சதவீதம் உயர்வு: கோடை கால ஆர்டர்கள் கைகொடுத்ததால் உற்சாகம்
ஆயத்த ஆடை ஏற்றுமதி 11.9 சதவீதம் உயர்வு: கோடை கால ஆர்டர்கள் கைகொடுத்ததால் உற்சாகம்
ADDED : செப் 21, 2024 05:50 AM
திருப்பூர் : கோடைகால ஆர்டர்கள் கை கொடுத்ததால், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி,, 11.9 சதவீதம் உயர்ந்துள்ளதாக, ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், கடந்தாண்டு வரலாறு காணாத அளவுக்கு, சோதனைகளை சந்தித்தது. விடாமுயற்சியால், சவால்களை கடந்து, பிப்., மாதத்தில் இருந்து மீண்டும் இயல்பு நிலை திரும்பியது. இதனால், கடந்த ஐந்து மாதங்களாக, வளர்ச்சிப்பாதையில் பயணித்து வருகிறது.
நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதத்தில், 53 ஆயிரத்து 431 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது. கடந்த ஆக., மாதம், 10 ஆயிரத்து 639 கோடி ரூபாய்க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. கடந்த, 2023 ஆக.,மாதம், 9,839 கோடி ரூபாய்க்கும், 2022 ஆக., மாதம், 9,816 கோடி ரூபாய்க்கும் ஏற்றுமதி நடந்தது.
கடந்த நிதியாண்டில் ஏப்., முதல் ஆக., வரையிலான ஐந்து மாதத்தில், 49 ஆயிரத்து 135 கோடி ரூபாய்க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது. இந்த நிதியாண்டில், அதே காலகட்டத்தில், 55 ஆயிரத்து 482 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது.
கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது, 11.9 சதவீதம் அளவுக்கு, ஆக., மாத வர்த்தகம் அதிகரித்துள்ளதாக, ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தென் பிராந்திய தலைவர் சக்திவேல் கூறுகையில், ''கடந்த ஐந்து மாதமாக, ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி அடைந்து வருவது புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 11.9 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது,'' என்றார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், ''வளர்ந்த நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள், இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதையே விரும்புகின்றனர். குறிப்பாக, திருப்பூருக்கான கோடைகால ஆர்டர்கள், இந்தாண்டு அதிகம் கிடைத்தது.
ஆர்டர் மீதான ஆயத்த ஆடை ஏற்றுமதி பரபரப்பாக நடந்து வருகிறது; வரும் மாதங்களில், மேலும் உயர வாய்ப்புள்ளது,'' என்றார்.