/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய விளையாட்டு தினம் கட்டுரை எழுத தயாரா?
/
தேசிய விளையாட்டு தினம் கட்டுரை எழுத தயாரா?
ADDED : ஆக 21, 2025 09:44 PM
திருப்பூர்; தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, திருப்பூர் தடகள சங்கம், 'மை இந்தியா மை ஸ்கூல்' அமைப்பு இணைந்து கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள்; பள்ளி, கல்லுாரி உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள்; விளையாட்டுப் பயிற்சியாளர்கள், முதியோர் பிரிவு வீரர்கள்; முன்னாள் விளையாட்டு வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொது பிரிவினர் என, நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது.
தமிழ் மொழியில், 'ஏ4' அளவுள்ள தாளில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல், தட்டச்சு, கையெழுத்தில் கள சிந்தனையுடன் (இணையத்தில் பதிவிறக்கம் செய்யாமல்) editortiruppursportsnews@gmail.com என்ற இ-மெயிலுக்கு கட்டுரையை சமர்ப்பிக்க வேண்டும். போட்டியில் பங்கேற்க கட்டணம் இல்லை. கட்டுரைகளை, அடுத்த மாதம், 2ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். செப்., 5ம் தேதி போட்டி முடிவு தெரிவிக்கப்படும்.
திருப்பூரில் அடுத்த மாதம் 7ம் தேதி நடைபெற உள்ள 7வது மாவட்ட ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் துவக்க நிகழ்ச்சியில் பரிசளிக்கப்படும். போட்டி தொடர்பான தலைப்பு மற்றும் விபரங்களுக்கு: 98435 12288.