sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'பளபள'க்கும் பரிந்துரைகள்... செயல்படுத்தினால் சிறக்கும்!

/

'பளபள'க்கும் பரிந்துரைகள்... செயல்படுத்தினால் சிறக்கும்!

'பளபள'க்கும் பரிந்துரைகள்... செயல்படுத்தினால் சிறக்கும்!

'பளபள'க்கும் பரிந்துரைகள்... செயல்படுத்தினால் சிறக்கும்!


ADDED : பிப் 19, 2024 12:43 AM

Google News

ADDED : பிப் 19, 2024 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் உள்ளூர்த் திட்டக்குழுமம் சிறப்பதற்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை செயல்படுத்தப்பட்டால், இப்பகுதி சிறக்கும் என்பது உறுதி.

3 ரிங் ரோடுகள்


முக்கிய நகரப்பகுதிகளை இணைக்கும், 'ரிங்' ரோடுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருமுருகன்பூண்டி, ஆண்டிபாளையம், செட்டிபாளையம், நெருப்பெரிச்சல் பகுதிகளை இணைக்கும் 'ரிங்' ரோட்டை, 60 அடி ரோடாக உயர்த்துவது; சுள்ளிக்காடு, அவிநாசி, கவுண்டம்பாளையம், பொல்லிக்காளிபாளையம் பகுதிகளை இணைக்கும், 150 அடி அகல ரிங் ரோடு அமைப்பது; செங்கப்பள்ளி, தெக்கலுார், சித்தம்பலம், அவிநாசிபாளையம் பகுதிகளை இணைக்கும், 100 அடி ரிங் ரோடு ஆகிய மூன்று ரிங் ரோடுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ரோட்டின் இருபுறமும், நடைபாதை ரோடுகளும் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ரோடு விரிவாக்கம்


கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை (எண்:81), அவிநாசி - அவிநாசிபாளையம் தேசிய நெடுஞ்சாலை (எண்:381) ரோடுகள்.

மாநில நெடுஞ்சாலை ரோடுகள்: அவிநாசி - பொள்ளாச்சி, திருப்பூர் - விஜயமங்கலம், திருப்பூர் - மேட்டூர், அவிநாசி - மேட்டுப்பாளையம், காங்கயம் - கோபி, பல்லடம் - உடுமலை, பல்லடம் - கோவை, அவிநாசி - பல்லடம், அன்னுார் - காமநாயக்கன்பாளையம், திருப்பூர் -சோமனுார், பல்லடம் - காரப்பாளையம், திருப்பூர் - படியூர், காரப்பாளையம் - தாராபுரம், திருப்பூர் - பெருந்துறை ஆகிய ரோடுகளை விரிவாக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சரக்கு முனையங்கள்


நகரின் சரக்கு வாகன போக்குவரத்தை குறைக்கும் வகையில், ரிங் ரோடுகள் மார்க்கமாக, நான்கு இடங்களில், சரக்கு முனையங்கள் அமைக்கப்படும். அதன்படி, அக்ரஹார பெரியபாளையம், பொல்லிக்காளிபாளையம், நேதாஜி ஆயத்த ஆடைப்பூங்கா, வஞ்சிபாளையம் பகுதிகளில் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிறு பஸ் ஸ்டாண்ட்


உள்ளூர் திட்டக்குழுமத்தில் உள்ள பஸ் ஸ்டாண்ட்களை விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அக்ரஹார பெரியபாளையம், வீரபாண்டி பிரிவு, குளத்துப்புதுாரில், புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கவும், கோவில்வழியில், பஸ் டிப்போ அமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

புதிய ரயில்வே ஸ்டேஷன்


திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன், 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். கோவை - சேலம் ரயில்வே வழித்தடத்தில், புறநகர் போக்குவரத்து அமைப்பை சாத்தியமாக்கும் வகையில், புதிதாக மண்ணரை, சிறுபூலுவபட்டி ஆகிய இரண்டு ரயில்வே ஸ்டேஷன்கள் உருவாக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் பாலங்கள்


கூடுதலாக, நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலங்கள், ஐந்து ரோடுகளில், மேம்பாலம்; 13 ரோடுகளில், கீழ்பாலங்களை விரிவுபடுத்துதல், ஆகிய பணிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கோவை 'கொடிசியா' போன்று திருப்பூரிலும் உருவாக்க பரிந்துரை

* மாநில அரசால் முன்மொழியப்பட்டபடி, 15.34 கோடி ரூபாயில், நாரணாபுரத்தில், பின்னலாடை கிளஸ்டர் பொது பயன்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.* திருமுருகன்பூண்டியில் அமைய உள்ள, ' டைடல் நியோ' பார்க், 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் சதுர அடியில் அமைகிறது; பிற நகரங்களிலும், 'மினி 'டைடல்' பார்க் அமைக்க, 32 கோடி ரூபாய் ஒதுக்கீடு.* கோவை 'கொடிசியா' போன்ற வர்த்தக பயன்பாட்டு மையம் அமைக்க பரிந்துரைக்கப்படுகிறது.* இடுவாய் கிராமத்தில், 1.025 ஏக்கரில், நகர்ப்புற வனம் அமைக்கப்படும்.* அவிநாசி பேரூராட்சியில், விளையாட்டு மைதானம் 6.6 ஏக்கரில் அமைக்கப்படும்.* பல்லடம் நகராட்சி பகுதியில், 7.1 ஏக்கரில், புதிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்.








      Dinamalar
      Follow us