/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மறு சுழற்சி விழிப்புணர்வு ; மாணவர்களுக்கு சபாஷ்!
/
மறு சுழற்சி விழிப்புணர்வு ; மாணவர்களுக்கு சபாஷ்!
ADDED : பிப் 15, 2025 07:16 AM

அவிநாசி; அவிநாசி அருகேயுள்ள அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், கிரீன் சைக்கிள் சொல்யூஷன் சார்பில், மறுசுழற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
'நம்ம ஸ்கூல்... நம்ம ஊரு பள்ளி' திட்டத்தின் கீழ், 2ம் ஆண்டாக மறு சுழற்சி மற்றும் நில பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ராம கிருஷ்ணன், தலைமை வகித்தார். கிரீன் சைக்கிள் சொல்யூஷன் அவிநாசி கிளை மேலாளர் ஜெபராஜ், மறு சுழற்சி மற்றும் நில பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம் குறித்து பேசினார்.
இதில், 5 முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும், 256 மாணவ, மாணவியர் தங்கள் வீடுகளில் இருந்து, 1,350 கிலோ பேப்பர், நோட்டு, அட்டைப்பெட்டி, பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வந்தனர். இதில், அதிகபட்சம், 23 கிலோ பேப்பர் கொண்டு வந்த, 7ம் வகுப்பு மாணவி பஹீமா; 22 கிலோ பேப்பர் கொண்டு வந்த ஹனீஷ் ஆகியோருக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. பொருட்கள் கொண்டு வந்த அனைவருக்கும் சான்றிதழ் மற்றும், 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மறுசுழற்சி முறையில் செய்யப்பட்ட பென்சில், நோட்டு, பேனா ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.

