தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மழை வரத்து குறைவு: தக்காளி விலை உயர்வு

மழை வரத்து குறைவு: தக்காளி விலை உயர்வு

மழை வரத்து குறைவு: தக்காளி விலை உயர்வு


UPDATED : நவ 28, 2026 06:24 PM

ADDED : நவ 28, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 06:24 PM ADDED : நவ 28, 2026 06:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: அவ்வப்போது பதிவாகிய மழை காரணமாக விளைச்சல் சற்று மட்டுப்பட்டுள்ளதால், தக்காளி வரத்து குறைந்து, விலை உயர்ந்துள்ளது. உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி, 38 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

கார்த்திகை வளர்பிறை முகூர்த்த தினங்கள் முடிந்த நிலையில், கடந்த வாரம் தக்காளி, 25 – 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அடுத்தடுத்த தினங்களில் திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்ததால், தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்தது. இதனால், நேற்று ஒரு கிலோ, 30 – 38 ரூபாயாக விலை உயர்ந்தது.

அதே நேரம், வெண்டை, கத்தரி விலை கிலோவுக்கு, பத்து ரூபாய் குறைந்துள்ளது. வரத்து அதிகரிப்பால், எலுமிச்சை கிலோவுக்கு, 30 ரூபாய் குறைந்துள்ளது. உருளை கிழங்கு கிலோவுக்கு, 20 ரூபாய் குறைந்து, 30 ரூபாயாகியுள்ளது. பாகற்காய், அவரை கிலோவுக்கு பத்து ரூபாய் உயர்ந்துள்ளது. சிறிய மற்றும் பெரிய வெங்காயம் விலையில் மாற்றமில்லை.

நேற்றைய விலை நிலவரம்:

கத்தரிக்காய் – 60, வெண்டை – 50, தக்காளி – 38, பச்சை மிளகாய் – 40, புடலங்காய் – 50, அவரைக்காய் – 90, கொத்தவரங்காய் – 40, பீர்க்கன்காய் – 60, சுரைக்காய் – 20, பாகற்காய் – 60, முள்ளங்கி – 40, எலுமிச்சை – 170, சின்ன வெங்காயம் – 140, பெரிய வெங்காயம் – 60, உருளைக்கிழங்கு – 30 முதல் 60 வரை, முட்டைக்கோஸ் – 20, காரட் – 40, பீட்ருட் – 60, பீன்ஸ் – 80, காலிபிளவர் – 40, மேரக்காய் – 30, நுால்கோல் – 30, இஞ்சி – 150, மல்லித்தழை – 30, கறிவேப்பிலை – 40, புதினா – 30, முருங்கை – 120 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us